காலை உணவைத் தவிர்ப்பவரா நீங்கள்? அப்ப கட்டாயம் இத படிங்க...



காலை உணவை ஏராளமான மக்கள் தவிர்ப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் காலையில் தாமதமாக எழுவது எனலாம். காலையில் தாமதமாக எழுவதால், அன்றைய நாளில் நாம் மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் தாமதம் ஏற்படும். இதனால் காலை உணவை ஒரு பொருட்டாக மதிக்காமல், பலரும் மதியம் சேர்த்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சாதாரணமாக நினைத்து விட்டுவிடுகின்றனர். ஆரோக்கியமான தமிழ்நாட்டு காலை உணவுகளும்... அதன் நன்மைகளும்...
ஆனால் ஒரு நாளில் காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. ஏனெனில் 8-9 மணிநேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பதால், உடலில் ஆற்றல் இல்லாமல் இருக்கும். அத்தகைய நிலையில் காலை உணவை தவிர்த்தால், அன்றைய நாளுக்கு வேண்டிய ஆற்றல் இல்லாமல், நாள் முழுவதும் சோர்வுடன் தான் செயல்படக்கூடும். அதுமட்டுமின்றி, காலையில் கண்ட உணவுகளை உண்பதைத் தவிர்த்து, ஆரோக்கியமான காலை உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால் மட்டுமே, நல்ல பலனைப் பெற முடியும். உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு - அமெரிக்க ஆய்வில் தகவல் சரி, ஏன் காலை உணவை உட்கொள்ள வேண்டும்? அப்படி காலை உணவை உட்கொள்ளாமல் இருந்தால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
ஆற்றல் இருக்காது :


காலை உணவைத் தவிர்த்தால், வயிற்றில் எதுவும் இல்லாமல், உடலுறுப்புக்களின் செயல்பாட்டிற்கு வேண்டிய ஆற்றல் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விடும். அதுமட்டுமின்றி ஒரு நாளில் என்ன தான் காலை உணவைத் தவிர்த்து, மதியம் மற்றும் இரவு நேரங்களில் வயிறு நிறைய உட்கொண்டாலும், உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்காமல், உடல் சோர்வுடனேயே இருக்கும்.
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் :


மன அழுத்தத்திற்கு காலை உணவைத் தவிர்ப்பதும் ஒரு காரணமாக இருக்கும். நீண்ட நேரம் உணவை உட்கொள்ளாமல் இருந்தால், மனநிலை மந்தமாகி, இதனால் மனதில் ஒருவித அழுத்தம் உருவாகி, அன்றைய நாளின் சந்தோஷமே பாழாகிவிடும்.
எடையில் ஏற்றத்தாழ்வு :


காலையில் ஆரோக்கியமான உணவை உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். சமீபத்திய ஆய்வு ஒன்றில், காலை உணவைத் தவறாமல் உட்கொள்ளும் பெண்களை விட, அதைத் தவிர்க்கும் பெண்களே உடல் பருமனால் அதிகம் அவஸ்தைப்படுவதாக தெரிய வந்துள்ளது. எனவே எடையைக் கட்டுப்பாட்டுடன் பராமரிக்க வேண்டுமானால், காலை உணவு மிகவும் இன்றியமையாதது.
இரத்த சர்க்கரை அளவு :


காலையில் எழும் போது நம் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தால், மயக்கம், சோர்வு போன்றவை ஏற்படக்கூடும். எனவே இவற்றைத் தவிர்க்க காலை உணவை எடுக்க வேண்டியது அவசியம்.
தைராய்டு :


முக்கியமாக, காலை உணவைத் தவிர்த்தால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்படும். அதனால் தான் பலர் திடீரென்று தைராய்டு பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments