இளம் கிரிக்கெட் வீரரை மணக்கும் சரத்குமார் - ராதிகா மகள்
ராதிகாவின் மகள் ரயானுக்கும், இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் கர்நாடகாவைச் சேர்ந்த அபிமன்யூவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வருகிற 23 -ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடக்கிறது.
ரயான் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் (விளையாட்டுத்துறை நிர்வாகம்) படித்தவர். சென்னையில் உள்ள ராடான் டிவியின் துணைத்தலைவராக இருக்கிறார்.
மணமகன் அபிமன்யூ மிதுன் கர்நாடகாவை சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர். ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
நிச்சயதார்த்தத்தின்போது திருமண தேதியை முடிவு செய்கிறார்கள். இது பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணம் ஆகும்.
0 Comments