Know about ur Heart


ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மனித இதயம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!!!

மனித உடலிலேயே இதயம் தான் மிகவும் முக்கியமான ஓர் உறுப்பு. சொல்லப்போனால் இது தான் உடலிலேயே மிகுந்த ஆற்றல் கொண்ட கடுமையாக உழைக்கும் உறுப்பு. இதயத்தின் முக்கிய பணி, உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த நாளங்களின் வழியே இரத்தத்தை அனுப்புவது. உடலிலேயே சற்றும் ஓய்வு எடுக்காமல் எப்போதும் வேலை செய்யும் உறுப்பும் இதுவே. மாரடைப்பை தடுக்க 30 எளிய வழிகள்!!! ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தன்று மக்களிடையே இதய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் நடைபெறும். இன்று உலக இதய தினம் என்பதால், அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 
உண்மை #1 : 
ஒரு வளரும் குழந்தையின் இதயத்தின் அளவு ஒரு கைப்பிடி அளவு இருக்கும். அதுவே ஒரு வளர்ந்த மனிதனின் இதயத்தின் அளவானது இரண்டு கைப்பிடி அளவு இருக்கும்.


உண்மை #2 : 
மனித இதயத்தின் எடை 1/2 கிலோவிற்கு குறைவாகத் தான் இருக்கும்



உண்மை #3 : 


இதய இரத்த குழாய்களின் நீளமானது நமது நாட்டில் உள்ள மொத்த ரயில் பாதையின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளமானது என்று பாருங்கள்.

உண்மை #4 : 


ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகளின் இதயத்துடிப்பு சற்று வேகமாக இருக்கும். அதில் ஆண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 70 முறையும், பெண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 78 முறையும் துடிக்கும்.

உண்மை #5 : 


இதயம் ஒவ்வொரு முறை சுருங்கும் போதும், உடலில் உள்ள சுமார் பத்தாயிரம் மைல் நீளமுள்ள இரத்தக் குழாய்களில் இரத்தத்தை அனுப்புகிறது.

உண்மை #6 : 



இதயமானது ஒரு நாளில் சுமார் 7200 லிட்டர் இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. ஆனால் உடலிலேயே விழிவெண்படலத்தில் மட்டும் இரத்தம் இல்லை.

Post a Comment

0 Comments