உடல் எப்படி தன்னைத் தானே சரிசெய்து கொள்கிறது?
புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. குறிப்பாக வருடக் கணக்கில் சிகரெட் பிடிப்பவர்களாக இருந்தால், அதனை நிறுத்துவது என்பது கடினம். ஆனால் அப்பழக்கத்தை கைவிட முடியும். அதற்கு ஒரு குறிக்கோள் மற்றும் மன உறுதியுடன், மனதைக் கட்டுப்பாட்டுடன் வைத்து, புகைப்பிடிப்பதைத் தூண்டும் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ஆண்களே! புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட சில சூப்பர் டிப்ஸ்... பலருக்கும் புகைப்பிடிப்பதை நிறுத்தினால்,
அதனால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கலாமா என்ற சந்தேகம் இருக்கும். பொதுவாக ஒருவர் சிகரெட் பிடிப்பதை நிறுத்திய 20 நிமிடங்களிலேயே உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ள ஆரம்பிக்கும். ஆனால் சிலர் 1 மணிநேரத்திற்கு ஒரு சிகரெட் என்ற வீதம் பிடிப்பதால், உடலால் தன்னைத் தானே சரிசெய்து கொள்ள முடியவில்லை. புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகள்!!! நீங்கள் சிகரெட்டை நிறுத்த நினைப்பவராயின் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். இக்கட்டுரையில் ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்தி 20 நிமிடங்கள் கழித்து உடல் எப்படி தன்னைத் தானே சரிசெய்து கொள்கிறது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

20 நிமிடங்களுக்கு பின்...
புகைப்பிடிக்கும் போது இதயத்தின் துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். ஆனால் அதை நிறுத்திய 20 நிமிடங்களுக்குப் பின் இதயத் துடிப்பு குறைய ஆரம்பித்து சீராகும்.
12 மணிநேரங்கள் கழித்து...
புகைப்பிடிப்பதை நிறுத்தி 12 மணிநேரங்கள் கழித்து, இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு அளவு குறைந்து, சாதாரண நிலைக்கு வந்துவிடும்.
2 வாரம் முதல் 3 மாதங்களுக்குள்...
சிகரெட்டை நிறுத்திய 2 வாரங்கள் முதல் 3 மாதத்திற்குள், மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
1 முதல் 9 மாதத்தில்...
பொதுவாக புகைப்பிடிப்பதை நிறுத்தினால், மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும். அதிலும் நீங்கள் சிகரெட்டை நிறுத்தி 1-9 மாதங்களாகியிருந்தால், சுவாசிப்பதில் இருந்த சிக்கல்கள் மற்றும் வறட்டு இருமல் வருவது முற்றிலும் குறைந்துவிடும்.
1 வருடத்தில்...
இதயச் சுவர்ச்சிரை நோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைந்து, இதயத்தின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
5 வருடங்களில்...
புகைப்பிடிப்பதை முற்றிலும் நிறுத்தி 5 வருடங்கள் ஆகிவிட்டால், பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைந்திருக்கும்.
10 வருடங்களில்...
நுரையீரல் புற்றுநோயினால் இறப்பு ஏற்படுவது பாதியாக குறையும். அதுமட்டுமின்றி இதர புற்றுநோய்களான வாய், தொண்டை, மூச்சுக்குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் கணையம் போன்றவற்றில் வரும் அபாயங்கள் குறையும்.
15 வருடங்களுக்குப் பின்...
சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 15 வருடங்கள் ஆகிவிட்டால், உங்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பே இருக்காது. எனவே புகைப்பிடிப்பதை உடனே நிறுத்தி, உங்களின் வாழ்நாளை சேமித்துக் கொண்டு, உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள்.
0 Comments