Tips for Weight Loss (Tamil)

சூடான நீரில் தேன், இலவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சை நீங்கள் எடை இழக்க எப்படி உதவ முடியும்


honey-lemon-cinnamon tamil


தேன், எலுமிச்சை மற்றும் வெதுவெதுப்பான நீர் ஆகியவை உங்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது, உங்கள் உடலின் நச்சுகளை சுத்தப் படுத்துதல் மற்றும் எடை இழப்பிலும் உதவி செய்கிறது. இது எலுமிச்சையிலுள்ள பெக்டின் உங்களை நீண்ட நேரம் பசியின்றி முழுமையாக வைக்க உதவும் காரணத்தால் தான். அதைத் தவிர,. எலுமிச்சை, தேன் மற்றும் நீர் கலவை உங்கள் வயிற்றில் ஒரு கார [1] சூழ்நிலையை உருவாக்குகிறது, இது கொழுப்பின் சிறந்த முறிவில் உதவுகிறது. நீங்கள் எலுமிச்சை,தேன் மற்றும் வெதுவெதுப்பான் நீர் குடிப்பதன் ஆரோக்கிய பலன்களை மற்றி மேலும் படிக்க விரும்பலாம்.
மறுபுறம், இலவங்கக்ப்பட்டை, செரிமானத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை ஒழுங்குப்படுத்துதல், மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடைதலில் உதவுகிறது. மேலும் அதுநீங்கள் சாப்பிட உணவிலிருந்து சத்துக்களின் ஜீரணத்தை அதிகரிக்கிறது மற்றும் முழுமையாக உணரவும் பசியைக் குறைக்கவும் உதவி அதன் மூலம் எடை இழப்பிற்கு உதவுகிறது.
அதை உபயோகிப்பது எப்படி?
உங்களுக்குத் தேவைப் படும் பொருட்கள்
  • ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள்- புதிதாக அரைத்தது
  • அரை எலுமிச்சைப் பழம் சாறு
  • ஒரு மேசைககரண்டி தேன்
  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர்
முறை
ஒரு டம்ளரில் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டைத் தூளை எடுத்துக் கொள்ளவும். இப்போது அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். அதை நன்றாக கலந்து ஒரு பேஸ்ட் தயாரிக்கவும். அதில் வெதுவெதுப்பான நீர் கலந்து நன்றாக கலக்கவும்.
எப்போது மற்றும் எவ்வளவு
ஒரு நாளைக்கு ஒரு முறை இந்தக் கலவையை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளவும். (சிறந்த நேரம் காலை வேளை) வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
ஒரு எச்சரிக்கை வார்த்தை: இது வெறும் வீட்டு வைத்தியம் மற்றும் மருத்துவ ஆலோசனைக்குப் பதில் உபயோகிக்கக் கூடாது. எந்த வீட்டு மருந்தை உபயோகிக்கும் முன்னும் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

Post a Comment

0 Comments