Students Power

கம்யூட்டர் சயின்ஸ் மாணவிகளுக்கான லேப்டாப் எங்கே?- கலெக்டரிடம் பொங்கிய மாணவிகள்

நெல்லை: நெல்லையில் கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை என மாணவிகள் காரசாரமாக புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுளளது. தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை என புகார் தெரிவிப்பதற்காக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகள் திரண்டனர். பின்னர் இது தொடர்பாக கலெக்டர் கருணாகரனிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். அதில் கூறியிருப்பதாவது, "பாளை குழந்தை ஏசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழி கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தமிழக அரசின் இலவச லேப்டாப் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. கம்யூட்டர் கல்விக்கு லேப்டாப் பயன்படும் என தெரிந்தும் இந்த மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஆனால் மற்ற அனைத்து பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் அது வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வேலை வாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஓதுக்கீடு வழங்குகிறது. ஆனால் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்காதது அதிர்ச்சி அளிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments