ஸ்மார்ட்வாட்ச் ஹேக்கிங் ஈசி : இந்திய ஆராய்ச்சியாளர் தகவல்..!!
புதிதாக ஸ்மார்ட்வாட்ச் வாங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்கின்றார் இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவர். பொதுவாக மற்ற கணினி சார்ந்த கருவிகளுடன் ஒப்படும் போசு ஸ்மார்ட்வாட்ச் கருவிகளை ஹேக் செய்வது மிகவும் எளிமையான காரியம் என்கின்றார் ரோமித் ராய் சவுத்ரி.
இல்லினியோஸ் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ரோமித் ராய் சவுத்ரி தான் உருவாக்கிய செயலியை சாம்சங் 'கியர் லைவ்' ஸ்மார்ட்வாட்ச் கருவியில் இந்ஸ்டால் செய்து கருவியில் இருக்கும் மோஷன் சென்சார்களை கொண்டு வாடிக்கையாளர்களின் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என கண்டறிந்திருக்கின்றார்.
மோஷன் லீக்ஸ் த்ரூ ஸ்மார்ட்வாட்ச் சென்சார் எனும் இந்த திட்டத்தின் மூலம் மின்னஞ்சல்கள், தேடல் விவரங்கள் மற்றும் மிகவும் முக்கிமான டாக்குமென்ட்களில் இருந்து தகவல்களை எடுக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த செயலி அக்செல்லோமீட்டர் மற்றும் கைரோஸ்கோப் பயன்படுத்தி வாடிக்கையாளர் கருவியின் கீபோர்டில் என்ன டைப் செய்கின்றார் என்பதை ட்ராக் செய்யும்.
0 Comments