ஆட்டோ டிரைவரை பலிவாங்க லாரியை மோத விட்டு 6 பேரை கொன்ற கொலையாளி கோர்ட்டில் சரண்!
நெல்லை: நெல்லை அருகே ஆட்டோ டிரைவரை பலிவாங்க லாரியை மோதவிட்டு 6 பேரை கொன்ற கொலையாளி திருமலைக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் புதூர் அருகே எதிரே நேற்று முன்தினம் லாரி மோதியதில் ஆட்டோவில் இருந்த 6 பேர் பலியானார்கள்
(15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலைக்குமார்)
முதலில் விபத்தாக இது கருதப்பட்டது. ஆனால் ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமியுடன் இருந்த முன்விரோதம் காரணமாகவே லாரியை ஓட்டி வந்த திருமலைக்குமார் திட்டமிட்டு விபத்தை போல ஏற்படுத்தி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது; ஒருவரை பலிவாங்க அப்பாவி 5 பேரையும் திருமலைகுமார் படுகொலை செய்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவான திருமலைக்குமாரை கைது செய்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் பலியான ஓட்டுநர் கருப்பசாமி குறித்து திருமலைக்குமாருக்கு உளவு தகவல் சொன்ன ஒருவரையும் போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருமலைக்குமாரை போலீஸ் நெருங்கிய நிலையில் அவன் இன்று திடீரென செங்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். அவனை நெல்லை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
0 Comments