உலகில் பிறந்த மிகவும் விசித்திரமான குழந்தைகள்!!!
'காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு' என்ற பழமொழிக்கேற்ப, ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் குழந்தை பொக்கிஷம் தான். அதிலும் குழந்தைக்கு பார்வை தெரியாவிட்டாலும், காது கேட்காவிட்டாலும், பேச முடியாவிட்டாலும், ஏன் ஊனமாக பிறந்தால் கூட, அந்த பெற்றோருக்கு அந்த குழந்தை வரப்பிரசாதம் தான்.
உலகில் ஆச்சரியப்படும் வகையிலான மிகவும் கொடூரமான குறைகளுடன் பல குழந்தைகள் பிறந்துள்ளனர். அக்குழந்தைகளைக் கண்டால் பலரது கண்களில் இருந்து கண்ணீர் தான் கொட்டும். அந்த அளவில் குழந்தைகள் விசித்திரமாக பிறந்துள்ளனர். இங்கு உலகில் விசித்திரமாக பிறந்த அக்குழந்தைகளின் படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தவளை போன்ற குழந்தை
2006 ஆம் ஆண்டில் சாரிகோட்டில் பிறந்த இந்த வினோதமான குழந்தை Anencephaly என்னும் குறைபாட்டினால் பிறந்துள்ளது. இதனால் நரம்பு குழாய் குறைபாட்டின் காரணமாக இக்குழந்தையின் தலைக்குரிய நரம்புக்குழாயின் முனை மூடாமல் இருந்ததோடு, இக்குழந்தைக்கு கழுத்தும் இல்லாததால், குழந்தை சுருங்கி தவளைப் போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ளது.
இரு முகம் கொண்ட குழந்தை
லாலி என்னும் இக்குழந்தை 2 மூக்கு, 4 கண்கள், 2 வாய், ஆனால் 2 காதுகளுடன் பிறந்தது. இக்குழந்தை மிகவும் அரிய வகை Diprosopus என்னும் கோளாறால் பாதிக்கப்பட்டதால், முகத்தின் போலி உருவாக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இக்குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஒற்றைக் கண் குழந்தை
நைஜீரியாவில் Cyclopia என்னும் அரிய வகை பிறப்பு குறைபாட்டினால் பிறந்த இக்குழந்தை, ஒற்றைக் கண்ணுடன், மூக்கு இன்றி மிகவும் விநோதமாக பிறந்துள்ளது.
புலி வரிகளைக் கொண்ட குழந்தை
உண்மையிலேயே இக்குழந்தை பார்ப்பதற்கு சற்று பயமாக இருக்கும். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் பிறந்த இக்குழந்தை விசித்திரமான தோல் நோயான Harlequin-type ichthyosis என்பதால் பாதிக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையின் சருமத்தில் புலியின் தோலைப் போன்று கோடுகள் இருந்ததோடு, குழந்தையின் கண்கள் சிவப்பாக ஏலியன் போன்று காணப்பட்டது.
இரட்டைத் தலை கொண்ட குழந்தை
கைரோவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த இந்த எகிப்தியன் குழந்தை, Craniopagus parasiticus என்னும் பிரச்சனையின் காரணமாக, இரட்டைத் தலையுடன் பிறந்தது.
இதயத்தை வெளியே கொண்ட குழந்தை 2009 ஆம் ஆண்டு இதயத்தை வெளியே கொண்ட ஓர் அதிசய குழந்தை பிறந்தது. Ectopia Cordis என்னும் பிறப்பு குறைபாட்டின் காரணமாக, இக்குழந்தைக்கு இதயமானது வெளியே இணைக்கப்பட்டிருந்தது.
பல கை,கால்களைக் கொண்ட குழந்தை
Polymelia என்னும் பிறப்பு குறைபாட்டினால், பல கை மற்றும் கால்களைக் கொண்ட குழந்தை இந்தியாவில் பிறந்தது.
0 Comments